< Back
மாநில செய்திகள்
விவசாய பணிகள் தீவிரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

விவசாய பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
21 Sept 2023 2:14 AM IST

அருப்புக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உளுந்து சாகுபடி

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மானாவாரியாக கம்பு, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இப்பகுதி விவசாயிகள் பருவமழையை நம்பி ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் விதைப்பு செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் உளுந்து விதைப்பு செய்து மழைக்காக காத்திருந்த நிலையில் மழை இல்லாததால் நஷ்டம் அடைந்து விடுவோமோ என விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்தநிலையில் தற்போது அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் உற்சாகத்துடன் விவசாய பணியை தொடங்கி உள்ளனர்.

தொடர்மழை

தற்போது உரம் இடும் பணி, களை எடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பாளையம்பட்டியை சேர்ந்த விவசாயி ராமன் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை பகுதிகளில் ஆவணி மாதத்தில் உளுந்து விதைப்பு செய்தோம். ஆனால் மழை வருமா? வராதா? என்ற கவலையில் இருந்தோம். தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் தற்போது உளுந்து விதைத்த பகுதிகளில் உரம் இடும் பணி, களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்