< Back
மாநில செய்திகள்
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்பெயரை சூட்ட நடவடிக்கை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்பெயரை சூட்ட நடவடிக்கை

தினத்தந்தி
|
21 Oct 2023 2:39 AM IST

கும்பகோணம் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்திற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம்:

மாநகராட்சி கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சுப. தமிழழகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

அய்யப்பன்:- எனது வார்டில் தெருவிளக்கு வேண்டும் என்று ஒரு ஆண்டுக்குமேலாக கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் விளக்கு அமைக்காமல் உள்ளது. விரைவில் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.

கட்டிட இடிபாடுகள்

பத்ம குமரேசன்:- தாராசுரம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மின்விளக்கு எரியாமல் உள்ளது. மேலும் தாராசுரம் மயானத்தை சுத்தம் செய்யவேண்டும்.ஆதிலட்சுமி:- மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த மாநகராட்சியில் அனுமதி கேட்கப்படுகிறது. அந்த மைதானத்தில் எந்த கட்டிட இடிபாடுகளும் இல்லை. இதற்கு எப்படி அனுமதி கேட்க முடியும். நாகேஸ்வரன் கோவில் தெருவில் சாலை சேதம் இல்லாமல் தான் உள்ளது. பின்னர் ஏன் அதனை புதிய சாலையாக அமைக்கும் பணி நடக்கிறது. மன்றத்தில் பொருள் வைக்காமல், டெண்டர் விடப்பட்டு அதன் பின்னர் அனுமதி கேட்பதை ஏற்க முடியாது.

சாலை அமைக்கும் பணி

துணை மேயர் தமிழழகன்:- நாகேஸ்வரன் கோவில் தெருவில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாலை அமைக்கும் பணி நடக்கிறது. மாமன்றத்தில் அனுமதி கேட்காமல் டெண்டர் விடப்படவில்லை.

அவசரகாலத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுபோன்று ஏற்கனவே அ.தி.மு.க. தலைமையிலான மாமன்றத்தில் பொருள் வைக்காமல் டெண்டர் விடப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்

செல்வம்:- நகர பஸ் நிலையத்திற்கு வேளாண் விஞ்ஞாணி எம்.எஸ். சுவாமிநாதன் பெயரை சூட்ட வேண்டும். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் ஒரு அடுக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலை விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சாலையை 2 அடுக்காக அமைக்க வேண்டும்.

துணை மேயர் தமிழழகன்:- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பெயரை உழவர் சந்தை அருகே உள்ள பழைய பஸ்நிலையத்தில் கட்டப்பட உள்ள வணிகவளாகத்திற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நோட்டீஸ்

தட்சிணாமூர்த்தி:- மாநகராட்சியில் சில பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸ் அனுமதி இல்லாமல் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி கண்காணிப்பு கேமரா வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர் லட்சுமணன்:- கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, கண்காணிப்பு கேமரா வைத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்