< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை தொழில் பூங்காவிற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது - தமிழக அரசு விளக்கம்
|16 Dec 2022 5:05 PM IST
கோவை தொழில் பூங்காவிற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ மூலம் ஒரு தொழில் பூங்காவை நிறுவ அரசு முடிவெடுத்தது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தக்கூடாது என விவசாயிகளும், அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழில் பூங்கா அமைக்க கையகப்படுத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. மேலும், இந்தவித கட்டாயமும் இன்றி விவசாயிகள் முன்வந்து தங்கள் நிலத்தை கொடுத்தால் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.