< Back
மாநில செய்திகள்
ரூ.36 லட்சம் செலவில் வேளாண் இடுபொருள்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ரூ.36 லட்சம் செலவில் வேளாண் இடுபொருள்கள்

தினத்தந்தி
|
23 May 2022 7:02 PM GMT

ரூ.36 லட்சம் வேளாண் இடுபொருட்களை கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

ராமநாதபுரம்,

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 1,997 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு கிராமத்தில் நடந்த இந்த விழாவில் கலெக்டர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி வண்ணாங்குண்டு கிராமத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் தென்னங்கன்றுகள், வரப்பில் பயிரிடுவதற்கான உளுந்து விதைகள், கைத்தெளிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் ஆகியவற்றை கலெக்டர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். மாவட்ட அளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த வேலையில்லா வேளாண் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் நோக்கத்துடன் தேர்தெடுக்கப்பட்ட 5 பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. விழாவில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், வேளாண்மை இணை இயக்குனர் டாம்சைலஸ், கூட்டுறவு இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத், வேளாண் துணைஇயக்குனர் சேக் அப்துல்லா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்