< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
19 Aug 2022 10:10 PM IST

தியாகதுருகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் வட்டார அட்மா குழு தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி விதை அலுவலர் மொட்டையாப்பிள்ளை வரவேற்றார். இதில் நேரடி நெல் விதைக்கும் கருவிகள், பேட்டரி ஸ்பிரேயர்கள், காய்கறி மற்றும் பழங்களை கையாளும் பிளாஸ்டிக் கூடைகள், காளான் வளர்ப்புக்கு தேவையான பொருட்கள் ஆகியவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டன. இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வராஜ், இளையராஜா, வினோத்குமார், துரைராஜ், ரகுராமன், வினோத், உதவி தொழில் நுட்ப மேலாளர் ரவி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்