< Back
மாநில செய்திகள்
விவசாய தொயழிலாளர் சங்க கூட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

விவசாய தொயழிலாளர் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:15 AM IST

கொரடாச்சேரியில் விவசாய தொயழிலாளர் சங்க கூட்டம்

கொரடாச்சேரி:

கொரடாச்சேரியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மாதவன் தலைமை தாங்கினாா். மாவட்ட செயலாளர் ராஜா விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பண்டிகை காலங்களில் விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும். படித்த பட்டியலின மாணவ, மாணவிகளுக்கு அரசு முழு மானியத்துடன் ரூ.10 லட்சம் தொழில் தொடங்க வழங்கிட வேண்டும். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடிசையில் வாழும் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும். 100 நாள் வேலையை பேரூராட்சி, நகராட்சிகளில் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்