< Back
மாநில செய்திகள்
வருவாய்த்துறையினருக்கு வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

வருவாய்த்துறையினருக்கு வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி

தினத்தந்தி
|
12 Sep 2022 7:17 PM GMT

சிவகாசியில் வருவாய்த்துறையினருக்கு வேளா ண்மை கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது.

சிவகாசி,

சிவகாசியில் வருவாய்த்துறையினருக்கு வேளா ண்மை கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது.

கணக்கெடுப்பு

மத்திய அரசு சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேளாண்மை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள நில உரிமை, பயன்பாடு மற்றும் பாசன ஆதாரம் தொடர்பான முக்கிய விவரங்கள் சேகரிப்பது வழக்கம். ஏற்கனவே 10 முறை இந்த கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு கடந்த ஜூலை மாதம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வருவாய் ஆய்வாளர்கள் மேற்பார்வையாளர்களாகவும், கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்புகள் கணினிமயமாக்கப்பட்ட நிலப்பதிவேடுகளை அடிப்படையாக கொண்டு கைப்பேசி செயலி மூலம் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்பு

இதற்கான பயிற்சி வகுப்பு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பிற்கு தாசில்தார் லோகநாதன் தலைமை தாங்கினார்.

புள்ளியியல் துறை துணை இயக்குனர் சங்கரவேல்பாண்டியன் பயிற்சி வகுப்பை நடத்தினார்.

இதில் சிவகாசி மண்டல துணை தாசில்தார் அருளானந்தம் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்