< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'அக்னிவீர் திட்டம்' ஆள்சேர்ப்பு... "வலைத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.."- அதிகாரி பேட்டி
|7 March 2023 9:29 AM IST
ஆள்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் தீபர் குமார் கூறியுள்ளார்.
திருச்சி,
இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இடைத்தரகர்களை நம்பாமல் ராணுவத்தின் வலைதளத்தில் மட்டும் பதிவுசெய்யவேண்டும் என்று திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் தீபர் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அக்னிவீர் திட்டத்துக்கு 16 தென் மாவட்டங்களில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள ராணுவத்தின் வலைத்தளத்தில் மார்ச் 15 வரை பதிவு செய்யலாம்.
ஆள்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது. பழைய முறையில், உடல்தகுதித் தேர்வுக்கு பின்னர் எழுத்து தேர்வும் நடைபெற்றது. ஆனால், புதிய முறையில் முதலில் ஆன்லைனில் எழுத்து தேர்வு நடைபெறும். அதற்கு பின்னரே உடற்தகுதி தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.