< Back
மாநில செய்திகள்
அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் - வைகோ வலியுறுத்தல்
மாநில செய்திகள்

'அக்னி பாதை' திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் - வைகோ வலியுறுத்தல்

தினத்தந்தி
|
17 Jun 2022 12:26 PM IST

அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, விமான படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னி பாதை' என்ற புதிய திட்டத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்திய படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல் 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்துவிடும்.

"இந்திய ராணுவத்தை காவி மயம் ஆக்கவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்துவதற்கான மறைமுக திட்டமே 'அக்னி பாதை' என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த திட்டத்தால் இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே 'அக்னி பாதை' திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்