< Back
மாநில செய்திகள்
கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது-ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு
மாநில செய்திகள்

கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது-ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு

தினத்தந்தி
|
4 May 2024 6:07 AM IST

தற்போதைய நிலவரப்படி சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும். இதற்கிடையே, ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'அக்னி நட்சத்திரம்' என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வரும் 28-ந் தேதி வரை நீடிக்கும்.

அதாவது, 25 நாட்கள் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்