
தஞ்சாவூர்
தஞ்சையில் வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட வணிகவரி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். வடக்கு வட்ட செயலாளர் அஜய்ராஜன், நகராட்சி சங்கங்களின் கூட்டமைப்பு மண்டல பொருளாளர் மூர்த்தி, அரசு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மண்டல செயலாளர் நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரேசன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டி.எஸ்.டி.ஓ. பதவி உயர்வினை உடனடியாக வழங்கவேண்டும். கோட்ட மாதறுல் ஆணையை உடனடியாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து கலந்து கொண்டனர். மேலும் நேற்று ஊழியர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்தும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் மதியழகன் நன்றி கூறினார்.