< Back
மாநில செய்திகள்

தஞ்சாவூர்
மாநில செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

27 April 2023 12:19 AM IST
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிற்றம்பலம் அருகே ஆவணத்தில் அமைந்துள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார். ஒன்றிய ஆணையர்கள் செல்வேந்திரன், தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலியபெருமாள் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சங்கத்தின் வட்டத் தலைவர் தேவதாஸ் நன்றி கூறினார்.