< Back
மாநில செய்திகள்
தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
25 April 2023 1:23 AM IST

தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு திரண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டுவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் நாகூர்கனி, பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மாவட்ட நிர்வாகிகள் செந்தில் நா.பழனிவேல், அலாவுதீன், மணிவண்ணன், ஜான்சன், செல்வம், மகளிரணி குணாபரமேஸ்வரி, சசிகலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்