< Back
மாநில செய்திகள்

மயிலாடுதுறை
மாநில செய்திகள்
மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

10 March 2023 12:45 AM IST
மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் மத்திய பொது துறை நிறுவனங்களின் நிதிகளை அதானிக்கு தாரைவாக்கும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லட்சுமணன், வட்டார தலைவர்கள் ஞானப்பிரகாசம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணைத்்தலைவர் பானுசேகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.