< Back
மாநில செய்திகள்

மயிலாடுதுறை
மாநில செய்திகள்
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

9 March 2023 12:30 AM IST
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்ரா செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், நகரத்தலைவர் ராமானுஜம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மகளிர் காங்கிரஸ் நகர நிர்வாகிகள் ரோசி, சுதா, கனிமொழி, குமுதவள்ளி, வனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.