< Back
மாநில செய்திகள்
வேதாரண்யத்தில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேதாரண்யத்தில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
22 Dec 2022 12:45 AM IST

வேதாரண்யத்தில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து வேதாரண்யத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், மாவட்ட கவுன்சிலர் தீலிபன், இளவரசி, ஒன்றியக் குழுதலைவர் கமலா அன்பழகன், முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட குழு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சண்முகராசு, எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், வக்கீல் வைரமணி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் மிரா ஷேக் மெய்தீன், குமரபாரதி, ராஜகிளி, சிறுபான்மை அணியை சேர்ந்த ஜின்னாஅலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைசெயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்