< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
|27 July 2022 9:57 PM IST
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் அருள்மாணிக்கம், மாவட்ட பொருளாளர் நவநீதம், மாவட்ட துணை செயலாளர்கள் மோகன், பிரபாகரன், அழகன், நிர்மலா குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகர செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை சட்ட துணை ஆலோசகர் வைரவநாதன், விவசாய அணி செயலாளர் பொன். பால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நாகூர் நகர செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.