< Back
தமிழக செய்திகள்

திருவாரூர்
தமிழக செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

26 July 2022 11:29 PM IST
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோனியா காந்தியை பழிவாங்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மகேந்திரன், மாநில செயலாளர் நவ்ஷாத், மாநில பேச்சாளர் மகாதேவன், மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மடப்புரம் சம்பத் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய அணி செயலாளர் அசோகன், மாவட்ட துணைத்தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.