< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 July 2022 4:15 PM GMT

கீழ்வேளூர், வேதாரண் யம் பகுதியில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதியில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்நடந்தது.

பணி பாதுகாப்பு

தமிழக அரசு பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதை போல 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசும் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

அரசு ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு கீழ்வேளூர் வட்டார தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். கல்வி மாவட்ட செயலாளர் சத்தியசீலன், வட்டார பொருளாளர் கன்னியம்மாள், வட்டார செயற்குழு உறுப்பினர்கள் நரேஷ் குமார், பாலு, செந்தில், பாலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்டார தலைவர் அன்பழகன், செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்