< Back
மாநில செய்திகள்
தஞ்சையில், அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில், அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
9 Jun 2022 12:57 AM IST

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தக்கோரி தஞ்சையில், அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:-

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தக்கோரி தஞ்சையில், அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா தொழிற்சங்கம்

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நகர போக்குவரத்துக்கழக கிளை அலுவலகம் முன்பு அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.

விவசாயப்பிரிவு மாநில இணை செயலாளர் ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் கதிரவன், பொருளாளர் மாறன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, ரமேஷ், சண்முகபிரபு, சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் நீலகண்டன் வரவேற்றார்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த கோரியும், தி.மு.க அரசின் பொய்யான வாக்குறுதிகளை கண்டித்தும், தற்போது வழங்கப்பட்டு வரும் அலவன்சுகளை இரு மடங்காக உயர்த்தி வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் வினுபாலன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தஞ்சை நகர கிளை செயலாளர் ஜோதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்