< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
தனுஷ்கோடிக்கு அகதியாக வர முயன்ற 7 பேர் பிடிபட்டனர்.
|10 Oct 2022 9:48 PM IST
தனுஷ்கோடிக்கு அகதியாக வர முயன்ற 7 பேரை இலங்கை கடற்படை பிடித்தது
ராமேசுவரம்,
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையை சேர்ந்தவர்கள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் 7 பேர் தனுஷ்கோடிக்கு வர முயன்று உள்ளனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது 7 பேரும் தமிழகத்திற்கு அகதியாக தப்பிவர இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை பிடித்துச்சென்று இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.