< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் பிடிபட்டனர்
|7 July 2022 12:08 AM IST
இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் பிடிபட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள மெய்யம்புளி பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை கியூ பிரிவு போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஒருவர் விருதுநகர் மாவட்டம் குன்னூர் சந்தை அகதிகள் முகாமை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 42) என்பதும் மற்றொருவர் இலங்கை வவுனியாவை சேர்ந்தவர் மிதுனன் (31) என்பதும் தெரிந்தது. இவர் கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து அகதியாக பதிவு செய்யாமல் பல்வேறு இடங்களில் தங்கி இருந்து தெரியவந்தது. இவர் களிடம் நடத்திய விசாரணையில் ராமேசுவரத்தில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி செல்வ தற்காக வந்ததாக தெரிவித்துள்ளனர். போலீசார் அந்த 2 பேரையும் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.