< Back
மாநில செய்திகள்
அகரம்பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அகரம்பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றம்

தினத்தந்தி
|
28 Jun 2023 3:14 PM IST

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் நூலக கட்டிடத்தில் இருந்த கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டதோடு பள்ளி முன் தேங்கியிருந்த கழிவுநீரும் வெளியேற்றப்பட்டது.

வாணாபுரம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம் பள்ளிப்பட்டு. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட நூலக கட்டிடம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் அதில் கட்டுமான பொருட்கள் போடப்பட்டு நூலகம் குடோனாக மாற்றப்பட்டு இருந்தது.

மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கி இருந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த அவலங்கள் குறித்து 'தினத்தந்தி' நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பள்ளியின் முன் பகுதியில் தேங்கியிருந்த கழிவு நீரைஅகற்றி அங்கிருந்த பள்ளத்தை மண்ணால் நிரப்பி சமன் செய்தனர்.

மேலும் நூலக கட்டிடத்தில் போடப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை அகற்றப்பட்டு தொடர்ந்து கட்டிடத்தில் கட்டுமான பொருட்களை வைக்காதவாறு நூலக கட்டிடத்தை பூட்டினர். இதற்கு நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்துக்கும் தற்கு காரணமாக செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ''நூலக கட்டிடத்தில் சமூக முன்னேற்றத்துக்கான புத்தகங்கள், செய்தித்தாள்களை வாங்கி பொதுமக்கள் படிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

மேலும் செய்திகள்