< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை - நெல்லை இடையே மதியம் சிறப்பு ரெயில் இயக்கம்
|22 April 2024 9:30 AM IST
ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06789) நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.