விருதுநகர்
மனைவிைய கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்த வாலிபர்
|ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு போலீசில் வாலிபர் சரண் அடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு போலீசில் வாலிபர் சரண் அடைந்தார்.
பெண் கொலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலை அடுத்த நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அழகேந்திரன் (வயது 29). தொழிலாளி. இவருடைய மனைவி அன்பரசி (28). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் நாச்சியார்புரம் கோழிப்பண்ணை அருகே அன்பரசி நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசில் சரண்
அவர்கள் விரைந்து வந்து அன்பரசியின் உடலை பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அழகேந்திரன் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து அவரிடம் ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.