< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த திருநாவுக்கரசர் எம்.பி.
|27 Jun 2023 1:12 AM IST
திருநாவுக்கரசர் எம்.பி.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. வார்டு வார்டாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் நேற்று 13,15,16,17,19, 20 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து, மனுக்களை பெற்றுக்கொண்டு, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார். நிகழ்ச்சியில் கோட்ட தலைவர் மதிவாணன், கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், எல். ரெக்ஸ், மணிமேகலை, தங்கலட்சுமி, சாதிக், மும்தாஜ், எல்ஐசி சங்கர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், சிறுபான்மை பிரிவு பேட்ரிக் ராஜ்குமார், மாநில செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.