தூத்துக்குடியில் திருநங்கைகளை அடித்து கூந்தலை அறுத்து கொடுமைப்படுத்திய இளைஞர்கள்.. வைரல் வீடியோ
|திருநங்கைகளை சில இளைஞர்கள் தாக்கி, அவர்களது கூந்தலை அறுத்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருநங்கைகளை சில இளைஞர்கள் தாக்கி, அவர்களது கூந்தலை அறுத்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமடை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில் இரண்டு திருநங்கைகளை ஒரு இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி கூந்தலை வெட்டி வீசுகிறார். அருகே மற்றுமொரு திருநங்கை காயங்களுடன் அமர்ந்து இருக்கிறார். பார்க்க பரிதாபமாக உள்ளது. மற்றொரு நபர் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து பலரும் திருநங்கைகளை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டுமென சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
காணொளியில் கண்ட இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்ரா கர்க், காவல்துறை தலைவர், தென்மண்டலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.