< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
8 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்
|28 Dec 2022 12:17 AM IST
8 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையினரால் கடந்த 20-ந் தேதி தடை விதிக்கப்பட்டது இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் 8 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.