12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
|12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்குகிறது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் ரூ. 1000-லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட உள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்றும், ஓய்வூதியம் மூலம் 30 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவர் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்குகிறது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது;
12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு. மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு நன்றி.
முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து இனி *ரூ.1200* ஆக உயர்த்தி வழங்கப்படும். சொல்லாததையும் செய்யும் ஆற்றல்மிகு அன்புத் தலைவர் நம் தமிழக முதல் அமைச்சர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.