< Back
மாநில செய்திகள்
10 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

10 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
10 Sep 2022 5:30 PM GMT

வேளாங்கண்ணி மாதா பேராலய விழாவிற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதால் 10 நாட்களுக்கு பிறகு கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி மாதா பேராலய விழாவிற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதால் 10 நாட்களுக்கு பிறகு கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

மாதா பேராலய ஆண்டு விழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி கடந்த 7-ந்தேதி நடந்தது. 8-ந்தேதி மாதா பிறந்த நாள் விழா நடந்தது. இதை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

கடலில் குளிக்க தடை

இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள். அப்போது அவர்கள் கடலில் குளிக்கும் போது உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதனால் வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.இதன் காரணமாக விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் கடலில் குளிக்கவில்லை.

ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்

இந்த நிலையில் 10 நாட்கள் நடந்த பேராலய ஆண்டு விழா முடிவடைந்ததால் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை என்பதால் வேளாங்கண்ணியில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்