< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 10 நாட்களுக்குப் பிறகு மலைப்பாதைக்கு அனுமதி
|25 Dec 2023 6:57 AM IST
மலைப்பாதையில் தற்போது 70 சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
திருவள்ளூர்,
கடந்த 4-ந்தேதி மிக்ஜம் புயல் காரணமாக திருத்தணி முருகன் கோவிலின் மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மலைப்பாதை சீரமைப்பு பணிகள் தொடங்கியதால் பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் மலைப்பாதையில் தற்போது 70 சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 10 நாட்களுக்குப் பிறகு பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.