< Back
மாநில செய்திகள்
1 ஆண்டுக்கு பிறகு நாகூர் வெட்டாற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு விடப்பட்டது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

1 ஆண்டுக்கு பிறகு நாகூர் வெட்டாற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு விடப்பட்டது

தினத்தந்தி
|
7 March 2023 6:50 PM GMT

சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் 1 ஆண்டுக்கு பிறகு நாகூர் வெட்டாற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு விடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகூர்:

சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் 1 ஆண்டுக்கு பிறகு நாகூர் வெட்டாற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு விடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலை

நாகூர்-நாகை இடையே வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு நாகை கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலை வழியாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

மேம்பாலம் சீரமைக்கும் பணி

இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் நாகூர் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் கடந்த 2020-ம் ஆண்டு சேதம் அடைந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.10.62 கோடி மதிப்பில் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

இதன் காரணமாக இந்த பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் நாகூர் மெயின் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் செல்வதால், நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது

பாலம் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த 1 ஆண்டாக நடந்து வந்த. பாலம் சீரமைக்கும் பணிகள் முடிவடைந்தது. இதை தொடர்ந்து இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், முகமதுஷநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட்டனர்.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

கிழக்கு கடற்கரை சாலையில் வெட்டாற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளதால் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்