< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள ஓலைச்சுவடிகளை மீட்க வலியுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள ஓலைச்சுவடிகளை மீட்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
20 Feb 2023 12:47 AM IST

வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள ஓலைச்சுவடிகளை மீட்க வலியுறுத்தப்பட்டது.

தமிழ்வழிக்கல்வி இயக்கம் சார்பில் உ.வே.சாமிநாதையர் பிறந்தநாள் விழா மற்றும் உலகத்தாய் மொழி நாள் விழா அரியலூரில் நடைபெற்றது. நிழச்சிக்கு தமிழக்களம் நிறுவனர் புலவர் அரங்கநாடன் தலைமை தாங்கினார். மொழி அறிஞர் விக்டர் கலந்து கொண்டு பேசுகையில் தமிழ்மொழி வரலாற்றில் உ.வே.சாமிநாதையர் சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். அவரின் தமிழ் பணிக்கு நமது அரியலூர் மண் பெரும் பங்காற்றியுள்ளது. அது மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் தான் உ.வே.சாமிநாதையருக்கு அதரவு அளித்து தமிழ் கற்றுகொடுத்து அவரது தமிழ்ப்பணிக்கு துணை நின்றனர். உ.வே.சாமிநாதையரின் கரங்களுக்கு கிட்டாத கணக்கில் அடங்கா ஓலைச்சுவடிகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகிறது. அவை அனைத்தையும் மீட்டு வந்து நாம் அச்சிட்டு வெளிக்கொணர்ந்தால் உலகில் தமிழரின் வரலாற்றில் புதிய திருப்புமுனை உருவாகும் என்று கூறினார். இதையடுத்து, அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் பேச்சு போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், காந்திமதி, முத்துக்குமரன், துரைவேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்