பெரம்பலூர்
மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள் உண்ணாவிரதம்
|மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு இந்தியில் பெயர் மாற்றம் செய்து மசோதா தாக்கல் செய்துள்ளது. இதனை திரும்பப்பெற வலியுறுத்தி பெரம்பலூர் பார் அசோசியேஷன் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் எதிரே வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பெரம்பலூர் பார் அசோசியேஷன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசகர் வாசுதேவன் தொடங்கி வைத்து பேசினார். இதில் பெரம்பலூர் பார் அசோசியேஷன் வக்கீல்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். வக்கீல்கள் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.