< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
|12 Oct 2023 12:15 AM IST
செங்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் செங்கோட்டை வழக்கறிஞா்கள் சங்கம் சார்பில் கோர்ட்டுகளில் இ-பைலிங்க் முறை அமல்படுத்துவதனை ஆட்சேபனை செய்வதோடு அத்தகைய நடைமுறையை முழுமையாக கைவிடக்கோரி கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் அருண், பொருளாளர் மூர்த்தி, துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, சங்க முன்னாள் செயலாளர் ஆதிபாலசுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் மாரிமுத்து, சுடர்முத்தையா, நல்லையா, சுப்பிரமணியன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.