< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
|13 Sept 2023 12:47 AM IST
இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்கக்கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இ-பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் அதன் தலைவர் மாரப்பன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர். இதேபோல் குளித்தலை வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) நீதிமன்ற புறக்கணிப்பில் வக்கீல் சங்கத்தினர் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.