< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
|1 Sept 2023 12:25 AM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனைச்சட்டம் 3 சட்ட பிரிவுகளை மாற்றி அமைத்து வடமொழி தலைப்புகள் பெயரில் மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாக்களுக்கு ஆலங்குடி வக்கீல்கள் சங்கத்தினர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டு புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அப்போது 3 சட்டங்களையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தியும், சட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிறைவேற்றினால் வக்கீல்கள் நாடு முழு வதும் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், வக்கீல்கள் தினந்தோறும் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.