< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தினத்தந்தி
|
19 July 2023 3:53 AM IST

சேரன்மாதேவியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி நீதிமன்ற வரம்பில் இருந்து வரும் வீரவநல்லூர் போலீஸ் நிலைய எல்கையை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்துடன் இணைக்கக்கூடாது, சேரன்மாதேவி தாலுகாவில் புதிய சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும், பாப்பாக்குடி போலீஸ் நிலையம் தற்போது வரையில் சேரன்மாதேவி தாலுகாவில் இருந்து வரும் நிலையில், அந்த போலீஸ் நிலைய பகுதியை ஆலங்குளம் நீதிமன்றத்தில் இருந்து சேரன்மாதேவி நீதிமன்றத்திற்கு மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சேரன்மாதேவியில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகிற 21-ந்தேதி வரை 4 நாட்கள் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் வக்கீல்கள் சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்