< Back
மாநில செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு
மாநில செய்திகள்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு

தினத்தந்தி
|
22 July 2024 3:16 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அக்கட்சியின் புதிய மாநில தலைவராக பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2009- மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் ஆனந்தன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

2006-ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து செயல்பட்டு வந்த ஆனந்தன் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜராகி எல்லா வழக்கில் இருந்து அவரை விடுவித்தவர் ஆனந்தன்.

மேலும் செய்திகள்