< Back
மாநில செய்திகள்
நடிகர் தனுஷ் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா?
மதுரை
மாநில செய்திகள்

நடிகர் தனுஷ் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா?

தினத்தந்தி
|
20 May 2022 6:13 PM GMT

நடிகர் தனுஷ் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து மேலூர் கதிரேசன் தரப்பு விளக்கம் அளித்து உள்ளது.

மதுரை,

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதி கதிரேசன்- மீனாட்சி. நடிகர் தனுஷ் எங்களின் மகன் தான் என்றும், அவர் மாதந்தோறும் பராமரிப்புத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கதிரேசன் தம்பதி மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்தது.

ஆனால் நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் தனது பிறப்பு சான்றிதழ் என்று தாக்கல் செய்த ஆவணம் போலியானது. எனவே அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கதிரேசன் தாக்கல் செய்த வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரி கதிரேசன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் கதிரேசன் தரப்பினருக்கு நடிகர் தனுஷ், கஸ்தூரிராஜா ஆகியோர் தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வந்தன.

இதுகுறித்து கதிரேசன் தரப்பு வக்கீல் டைட்டஸ் கூறுகையில், நடிகர் தனுஷ், கஸ்தூரிராஜா தரப்பில் இருந்து இதுவரை எந்த நோட்டீசும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள்தான் அவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்