< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வக்கீல் குமாஸ்தா பலி
|11 July 2022 11:11 PM IST
சிதம்பரம் அண்ணாமலைநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வக்கீல் குமாஸ்தா பலி
சிதம்பரம்
சீர்காழி திருமுல்லைவாசல், முல்லை நகரை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் கணேசன் (45). வக்கீல் குமாஸ்தாவான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சிதம்பரம்-கடவாச்சேரி பைபாஸ் சாலை வழியாக சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கணேசன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.