< Back
மாநில செய்திகள்
விநாயகர் ஊர்வலம் குறித்து ஆலோசனை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விநாயகர் ஊர்வலம் குறித்து ஆலோசனை

தினத்தந்தி
|
11 Sept 2023 12:30 AM IST

விநாயகர் ஊர்வலம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அண்ணாமண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இந்து முன்னணி விநாயகர் குழு ஒருங்கிணைப்பாளர் கொந்தை பாலு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேஷ், மாவட்ட செயலாளர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் கிஷோர் வரவேற்றார். அரசின் விதிமுறைகளை பின்பற்றி போலீசாரின் வழிகாட்டுதலோடு ஊர்வலத்தை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் சுதர்சன், சஞ்சய், அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்