< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
|10 Oct 2022 12:28 PM IST
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக டி.ஜி.பி, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.