< Back
மாநில செய்திகள்
விதிமுறையை மீறி விளம்பர பேனர்கள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

விதிமுறையை மீறி விளம்பர பேனர்கள்

தினத்தந்தி
|
19 Aug 2023 1:00 AM IST

விதிமுறையை மீறி விளம்பர பேனர்கள்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரியங்காவிடம், தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பொது இடங்கள், தனியார் இடங்களில் விளம்பர பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி கோரி குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். அதன்பிறகு போலீசார் அனுமதி பெற்று வைக்க வேண்டும்.

ஆனால் பொள்ளாச்சி நகரில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விதிகளை மீறி தனியார் இடங்களில் பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர், போலீசாரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகரில் விதிமுறையை மீறி வைக்கப்பட்டு உள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்