கடலூர்
ராமநத்தத்தில் லாட்ஜில் விபசாரம்; 5 பேர் கைது 3 அழகிகள் மீட்பு
|ராமநத்தத்தில் லாட்ஜியில் விபசாரம் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.
ராமநத்தம்,
கடலூர் மாவட்டம் ராமநத்தம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராமநத்தம் போலீசார் லாட்ஜில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது, அங்கு 3 அழகிகளை வைத்து 5 பேர் விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 3 அழகிகளையும் போலீசார் மீட்டு, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இவர்கள் பெரம்பலூர், சேலம், திட்டக்குடியை சேர்ந்தவர்கள் ஆவர்.
5 பேர் கைது
மேலும் விபசாரம் நடத்திய 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அரியலூர் மாவட்டம் மனக்கால் கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் முருகேசன் (வயது 60), பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமம் பெரியசாமி மகன் பழனிசாமி (52), சேலம் மாவட்டம் லத்துவாடி பெரிய பையன் மகன் ஆறுமுகம் (45), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரகுநாத் கோன் மகன் லஷ்மி கண்டிகோண் (22), வேலூர் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் சிவா (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.