< Back
மாநில செய்திகள்
ராமநத்தம் லாட்ஜில் விபசாரம்; 4 அழகிகள் மீட்பு மேலாளர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

ராமநத்தம் லாட்ஜில் விபசாரம்; 4 அழகிகள் மீட்பு மேலாளர் கைது

தினத்தந்தி
|
27 Sept 2023 12:15 AM IST

ராமநத்தம் லாட்ஜில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 அழகிகள் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக லாட்ஜ் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

ராமநத்தம்,

லாட்ஜில் விபசாரம்

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் சென்னை செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி ராமநத்தம் போலீசார் நேற்று, அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 4 அறைகளில் 4 அழகிகள் தனித்தனியாக இருந்தனர். அவர்களுடன் ஆண்களும் இருந்தனர். இதையடுத்து 4 அழகிகளையும் போலீசார் மீட்டனர்.

மேலாளர் கைது

விசாரணையில், திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் ராமநத்தத்தில் லாட்ஜை குத்தகைக்கு எடுத்திருப்பதும், சமயபுரத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்(வயது 48) என்பவர் லாட்ஜ் மேலாளராக இருப்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 அழகிகள் திட்டக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லாட்ஜ் மேலாளர் நவநீதகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள லாரன்சையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்