< Back
மாநில செய்திகள்
நன்னடத்தை விதியை மீறி கஞ்சா விற்ற வாலிபருக்கு 236 நாட்கள் சிறை தண்டனை; துணை கமிஷனர் உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

நன்னடத்தை விதியை மீறி கஞ்சா விற்ற வாலிபருக்கு 236 நாட்கள் சிறை தண்டனை; துணை கமிஷனர் உத்தரவு

தினத்தந்தி
|
27 Jun 2022 11:41 AM IST

நன்னடத்தை விதியை மீறி கஞ்சா விற்ற வாலிபருக்கு 236 நாட்கள் சிறை தண்டனை விதித்து துணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை கண்ணகிநகரைச் சேர்தவர் சசிகுமார் என்ற புறா (வயது 29). இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் முன்னிலையில் ஆஜரான சசிகுமார், திருந்தி வாழ்வதாக உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். அதன்படி அவர் 1 வருடம் எந்த குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது என்று நன்னடத்தை விதி வகுக்கப்பட்டது.

ஆனால் அந்த நன்னடத்தை விதியை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அமைந்தகரை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். இதனால் 1 வருடத்தில், நன்னடத்தை விதியின்படி செயல்பட்ட நாட்கள் போக மீதி 236 நாட்கள் பிணையில் வெளிவர முடியாத சிறை தண்டனை வாலிபர் சசிகுமாருக்கு விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை துணை கமிஷனர் பகலவன் பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்