< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
|24 Jun 2022 2:45 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், காட்டுக்கூடலூர் நடு தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணி (32) இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் இருந்த மணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது சம்பந்தமாக தகவலறிந்த அச்சரப்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.