இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
|இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரவாயல் வடக்கு பகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகப் பொருளாளர் ஜாவித் அகமத் திடீரென அகால மரணமடைந்து விட்டதால், இப்பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற 21.9.2024 அன்று நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் 21.9.2024 அன்று நடைபெற உள்ள பிற பொதுக்கூட்டங்களை, அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பிறகோ நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.