< Back
மாநில செய்திகள்
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
மாநில செய்திகள்

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

தினத்தந்தி
|
22 Jun 2024 9:56 AM IST

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழக சட்டசபையின் 3ம் நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது விதிகளின்படி கூட்டத்தொடரின் ஒருமணி நேரம் வினாக்கள்-விடைகள் நேரம் எனவும், சட்டசபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் எனவும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து விஷ சாராய விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை எனக்கூறி அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்